Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி வாலிபர் கொலை வழக்கு மேலும் ஒருவர் சரண்

பரமக்குடி வாலிபர் கொலை வழக்கு மேலும் ஒருவர் சரண்

பரமக்குடி வாலிபர் கொலை வழக்கு மேலும் ஒருவர் சரண்

பரமக்குடி வாலிபர் கொலை வழக்கு மேலும் ஒருவர் சரண்

ADDED : மார் 14, 2025 07:14 AM


Google News
பரமக்குடி: பரமக்குடியில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பரமக்குடி அருகே விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தைச் சேர்ந்த இருளாண்டி மகன் உத்திரகுமார் 35. இவர் மார்ச் 5 இரவு 9:00 மணிக்கு பரமக்குடி தீயணைப்பு நிலையம் அருகில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தில் பரமக்குடி வைகை நகர் பேபிகரன் 23, மஞ்சள்பட்டணம் தீனதயாளன் 23, பங்களா ரோடு அப்துல் கலாம் 23, ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வந்த நிலையில், வைகை நகரில் வசிக்கும் கள்ளிக்கோட்டை ராமச்சந்திரன் மகன் நிதிஷ் 26, பரமக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முன்பு சரணடைந்தார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us