/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசுப்பள்ளியில் மர்மநபர்கள் அராஜகம் வகுப்பறையில் மல ஜலம்; பொருட்கள் சேதம் புகார் இல்லை; குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் அதிகாரிகள் செயல்பாடா? அரசுப்பள்ளியில் மர்மநபர்கள் அராஜகம் வகுப்பறையில் மல ஜலம்; பொருட்கள் சேதம் புகார் இல்லை; குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் அதிகாரிகள் செயல்பாடா?
அரசுப்பள்ளியில் மர்மநபர்கள் அராஜகம் வகுப்பறையில் மல ஜலம்; பொருட்கள் சேதம் புகார் இல்லை; குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் அதிகாரிகள் செயல்பாடா?
அரசுப்பள்ளியில் மர்மநபர்கள் அராஜகம் வகுப்பறையில் மல ஜலம்; பொருட்கள் சேதம் புகார் இல்லை; குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் அதிகாரிகள் செயல்பாடா?
அரசுப்பள்ளியில் மர்மநபர்கள் அராஜகம் வகுப்பறையில் மல ஜலம்; பொருட்கள் சேதம் புகார் இல்லை; குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் அதிகாரிகள் செயல்பாடா?
ADDED : ஜூலை 10, 2024 11:13 PM

ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே நாகனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், வகுப்பறையை சேதப்படுத்தி மது அருந்தி பாட்டில்களை உடைத்தும், மல ஜலம் கழித்து அசுத்தம் செய்தவர்கள் மீது புகார் அளிக்காததால் இரண்டாவது நாளாக மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்தனர்.
உப்பூர் அருகே நாகனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 11 மாணவர்கள் படிக்கின்றனர். வார விடுமுறை முடிந்து ஜூலை 8ல் ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்ற போது பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டு மாணவர்கள் அமரும் சேர்கள் சேதப்படுத்தப்பட்டு பீரோ உடைக்கப்பட்டிருந்தன.
மேலும், பள்ளியில் இருந்த ஆவணங்கள், புத்தகங்கள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டிருந்தன. மது பாட்டில்கள் வகுப்பறை முழுதும் உடைக்கப்பட்டு மல ஜலம் கழித்து அசுத்தம் செய்யப்பட்டிருந்தது.
இதையறிந்த பெற்றோர் பள்ளி வகுப்பறையை சேதப்படுத்தி அசுத்தம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இரண்டு நாட்களுக்கு மேலாகியும் கல்வி அதிகாரிகள் போலீசில் புகார் செய்யாமல் குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுவதாகக் கூறி, நேற்று மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்தனர்.
இதனால் மாணவர்களின் பெற்றோரை சந்தித்து வட்டார கல்வி அலுவலர் தமிழரசி பேச்சு நடத்தினார். அவர் கூறுகையில், ''பள்ளியில் உள்ள 11 மாணவர்களில் நான்கு பேர் வழக்கம் போல பள்ளிக்கு வருகின்றனர். ஒரு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் மட்டுமே வரவில்லை. அவர்களின் பெற்றோரை சந்தித்து பேச்சு நடத்தி வருகிறோம்,'' என்றார்.