Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாற்றுத்திறன் குழந்தைகள் கடலில் இன்று நீச்சல் பயணம்

மாற்றுத்திறன் குழந்தைகள் கடலில் இன்று நீச்சல் பயணம்

மாற்றுத்திறன் குழந்தைகள் கடலில் இன்று நீச்சல் பயணம்

மாற்றுத்திறன் குழந்தைகள் கடலில் இன்று நீச்சல் பயணம்

ADDED : ஆக 05, 2024 07:17 AM


Google News
ராமநாதபுரம் : ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு 604 கி.மீ., கடல் வழியாக 15 மாற்றுத்திறன் மாணவர்கள் கடலில் நீச்சல் பயணம் செல்கின்றனர்.

இன்று (ஆக.,5) அதிகாலை 5:00 மணிக்கு மண்டபத்திலிருந்து நீச்சல் பயணம் துவங்குகிறது.சென்னை வேவ்ரைடர்ஸ் குழுவானது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து மாற்றுத்திறன் குழந்தைகள் பங்கேற்கும் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வரை 604 கி.மீ., கடலில் தொடர் நீச்சல் பயணம் நடக்கிறது.

இன்று (ஆக.,5) மண்டபம் கடற்கரையில் துவங்கி தினமும் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை நீச்சல் பயணம் நடக்கிறது.

தொண்டி, காட்டுமாவடி, வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, பழையாறு, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, மரக்காணம், மகாபலிபுரம், ஈஞ்சம்பாக்கம் வழியாக மெரினா கடற்கரையை ஆக.15ல் சென்றடையும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us