/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஏர்வாடி ஹக்தார்கள் நன்றி அறிவிப்பு ஏர்வாடி ஹக்தார்கள் நன்றி அறிவிப்பு
ஏர்வாடி ஹக்தார்கள் நன்றி அறிவிப்பு
ஏர்வாடி ஹக்தார்கள் நன்றி அறிவிப்பு
ஏர்வாடி ஹக்தார்கள் நன்றி அறிவிப்பு
ADDED : ஜூன் 10, 2024 06:14 AM
கீழக்கரை, : -ஏர்வாடி அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்காவில் 850ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கடந்த மே 9ல் துவங்கி ஜூன் 7ல் கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தது.
ஏர்வாடி ஹக்தார் நிர்வாக சபையின் தலைவர் எஸ்.முகமது பாக்கிர் சுல்தான் லெவ்வை, செயலாளர் எஸ்.செய்யது சிராஜுதீன் லெவ்வை, உதவி தலைவர் ஜெ.சாதிக் பாட்ஷா லெவ்வை, நிர்வாக சபை உறுப்பினர்கள், பொது மகாசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர்,
மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா சிறக்க ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறை, வருவாய்த்துறை, மக்கள் பிரதிநிதிகள், அனைத்து சமுதாயப் பொதுமக்கள், உள்ளூரை சேர்ந்த ஹிந்து சமுதாய மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.