ADDED : ஜூலை 13, 2024 04:51 AM

பரமக்குடி, பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் குரு பகவான் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறையில் உள்ள இக்கோயிலில் குரு பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.