/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வனப்பேச்சி, ராக்காச்சி கோயிலில் அபிேஷகம் வனப்பேச்சி, ராக்காச்சி கோயிலில் அபிேஷகம்
வனப்பேச்சி, ராக்காச்சி கோயிலில் அபிேஷகம்
வனப்பேச்சி, ராக்காச்சி கோயிலில் அபிேஷகம்
வனப்பேச்சி, ராக்காச்சி கோயிலில் அபிேஷகம்
ADDED : ஜூன் 07, 2024 05:01 AM

கடலாடி: கடலாடி அருகே சமத்துவபுரம் வழியில் ராக்காச்சி அம்மன் மற்றும் வனப்பேச்சி அம்மன் கோயில் உள்ளது. வைகாசி அமாவாசையை முன்னிட்டு மூலவர்களுக்கு 16 வகை அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் பொங்கலிட்டும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர்.
அம்மனுக்கு நெய்வேத்தியமாக மதுரை அழகர் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட காஞ்சிரம்பழம் படைக்கப்பட்டது. அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.