/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மீனவரின் வலையில் சிக்கிய கடல் பசு கடலில் விடப்பட்டது மீனவரின் வலையில் சிக்கிய கடல் பசு கடலில் விடப்பட்டது
மீனவரின் வலையில் சிக்கிய கடல் பசு கடலில் விடப்பட்டது
மீனவரின் வலையில் சிக்கிய கடல் பசு கடலில் விடப்பட்டது
மீனவரின் வலையில் சிக்கிய கடல் பசு கடலில் விடப்பட்டது
ADDED : ஜூலை 21, 2024 06:58 AM

தொண்டி : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி நம்புதாளையில் கடலில் மீன் பிடித்த போது வலையில் சிக்கிய கடல் பசுவை மீனவர்கள் பத்திரமாக மீண்டும் கடலில் விட்டனர்.
நம்புதாளை மீனவர்கள் பூமணி 42, கரண் 35, முருகானந்தம் 45, ஆகியோர் நேற்று அதிகாலை நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். நீண்ட துாரம் சென்று மீன்பிடித்த போது ஒரு கடல் பசு வலையில் சிக்கியது. மீனவர்கள் தொண்டி மரைன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
கடல் பசுவை பத்திரமாக மீண்டும் கடலில் விட போலீசார் அவர்களை அறிவுறுத்தினர். அதன்படி மீனவர்கள் கடல் பசுவை மீண்டும் கடலில் விட்டனர்.
மேலும் அவர்கள் அதை வீடியோ பதிவு செய்து போலீஸ் மற்றும் வனத்துறைக்கு அனுப்பினர்.
மீனவர்கள் கூறியதாவது: அபூர்வ வகை கடல் பசுவை பாதுகாக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளதால் வலையில் சிக்கிய அந்த கடல் பசுவை பத்திரமாக மீட்டு கடலில் விட்டோம்.
கடல் பசு 150 முதல் 200 கிலோ எடையில் இருந்தது. இதனால் வலை மிகவும் சேதமடைந்து விட்டது என்றனர்.