/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பண்டிகை காலங்களில் கடற்கரை ஓரம் குப்பை துாய்மைப்பணி செய்ய கோரிக்கை பண்டிகை காலங்களில் கடற்கரை ஓரம் குப்பை துாய்மைப்பணி செய்ய கோரிக்கை
பண்டிகை காலங்களில் கடற்கரை ஓரம் குப்பை துாய்மைப்பணி செய்ய கோரிக்கை
பண்டிகை காலங்களில் கடற்கரை ஓரம் குப்பை துாய்மைப்பணி செய்ய கோரிக்கை
பண்டிகை காலங்களில் கடற்கரை ஓரம் குப்பை துாய்மைப்பணி செய்ய கோரிக்கை
ADDED : ஜூன் 21, 2024 04:02 AM
கீழக்கரை: கீழக்கரை மன்னர் வளைகுடா கடற்கரையோர பகுதிகளில் வீடுகளில் சேதமடைந்த கட்டடக் கழிவுகளை கொட்டும் செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடற்கரை ஓரங்களில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டன. தின்பண்ட கடைகள் உள்ளிட்டவைகளில் சேர்ந்த குப்பை அதிகளவில் கடற்கரை ஓரம் கொட்டப்படுகிறது. கழிவு நீரும் நேரடியாக கடலில் விடப்பட்டது.
இதனால் கடல் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கீழக்கரை சுற்றுலா நிறுவன உரிமையாளர் முகம்மது ரபீக் கூறியதாவது:
கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரையோரம் நாளுக்கு நாள் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. இப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது.
வெள்ளை மணற்பரப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வனத்துறையினரின் ரோந்து சுற்றுவதற்காக வழங்கப்பட்ட ஐந்து நாட்டுப் படகுகள் பயன்பாடின்றி கடற்கரை மணலில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் குடிமகன்கள் அவ்விடத்தில் மது அருந்தும் இடமாக மாற்றி வருகின்றனர்.
எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் கடற்கரையோர பகுதிகளில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் இடங்களில் குப்பை தொட்டிகளை வைக்கவும், துாய்மை பணிகளை அடிக்கடி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.