/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருவாடானையில் கிடப்பில் புதிய ஜெயில் கட்டடம் கட்டும் திட்டம் திருவாடானையில் கிடப்பில் புதிய ஜெயில் கட்டடம் கட்டும் திட்டம்
திருவாடானையில் கிடப்பில் புதிய ஜெயில் கட்டடம் கட்டும் திட்டம்
திருவாடானையில் கிடப்பில் புதிய ஜெயில் கட்டடம் கட்டும் திட்டம்
திருவாடானையில் கிடப்பில் புதிய ஜெயில் கட்டடம் கட்டும் திட்டம்
ADDED : ஜூலை 16, 2024 05:53 AM
திருவாடானை, : திருவாடானையில் புதிய ஜெயில் கட்டடம் கட்டுவதற்கான திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
திருவாடானையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஜெயில் இருந்தது. கட்டடம் மிகவும் சேதமடைந்ததால் 7 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, தொண்டி, எஸ்.பி.பட்டினம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் கைது செய்யப்படும் கைதிகள் ராமநாதபுரம் கிளை சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
நீண்ட துாரம் கைதிகளை அழைத்து செல்வவதால் போலீசார் சிரமம் அடைகின்றனர். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய ஜெயில் கட்டடம் கட்ட ரூ.2 கோடியே 28 லட்சத்து 16 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் போதிய இடம் கிடைக்காமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
கடந்த மே 3 ல் கலெக்டர் விஷ்ணுசந்திரன், எஸ்.பி. சந்தீஸ், மாவட்ட சிறை அலுவலர் தவமணி உள்ளிட்ட அதிகாரிகள் கட்டடம் கட்டுவதற்கான இடங்களை ஆய்வு செய்தனர். புதிய ஜெயில் கட்ட 2 ஏக்கர் இடம் தேவைப்பட்டதால் பெரியகீரமங்கலம் ஊராட்சி சின்னக் கீரமங்கலத்தில் உள்ள இடத்தை பார்வையிட்டனர். ஆனால் இதுவரை பணிகளை துவங்கவில்லை. விரைவில் பணிகளை துவக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.