/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடினர் ராமேஸ்வரம் கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்
ராமேஸ்வரம் கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்
ராமேஸ்வரம் கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்
ராமேஸ்வரம் கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்
ADDED : ஜூன் 06, 2024 11:06 PM

ராமேஸ்வரம்:வைகாசி அமாவாசையில் ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
நேற்று வைகாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்தனர். முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி தர்ப்பணம் செய்தனர். பின் கோயில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார்கள்.
பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். இதன் பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் வருகையால் ராமேஸ்வரம் திட்டக்குடி, கோயில் மேலரத வீதி, அக்னி தீர்த்த கடற்கரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உள்வாங்கிய கடல்
அக்னி தீர்த்தக் கடல் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு திடீரென 200 மீ., உள்வாங்கியது. கடலோரத்தில் உள்ள பாசி படர்ந்த பவளப்பாறைகள் வெளியில் தெரிந்தன. மேலும் கடல் சிப்பிகள், சிறிய ரகமீன் குஞ்சுகள் தேங்கி கிடந்த கடல் நீர் குட்டையில் தத்தளித்தன. மதியம் 12:00 மணிக்கு பின் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது.
தென்மேற்கு பருவக்காற்று வீசும் சீசனில் அக்னி தீர்த்த கடல் உள்வாங்குவதும் பின் இயல்பு நிலைக்கு திரும்புவதும் சகஜம் என மீனவர்கள் தெரிவித்தனர்.