/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் நெடுஞ்சாலையில் போலீசார் இன்றி திகில் பயணம் பரமக்குடியில் நெடுஞ்சாலையில் போலீசார் இன்றி திகில் பயணம்
பரமக்குடியில் நெடுஞ்சாலையில் போலீசார் இன்றி திகில் பயணம்
பரமக்குடியில் நெடுஞ்சாலையில் போலீசார் இன்றி திகில் பயணம்
பரமக்குடியில் நெடுஞ்சாலையில் போலீசார் இன்றி திகில் பயணம்
ADDED : ஜூலை 08, 2024 06:04 AM

பரமக்குடி: பரமக்குடியில் மதுரை- ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் போலீசார் கண்காணிப்பின்றி பள்ளி மாணவர்கள், பெற்றோர் திகில் பயணம் செய்கின்றனர்.
பரமக்குடியில் நகராட்சி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என அதிகளவில் மதுரை-ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் செயல்படுகிறது.
மணி நகர் துவங்கி பாரதி நகர், ஐந்து முனை ரோடு அருகில், கொல்லம்பட்டறை தெரு சந்திப்பு, ஆர்ச் பகுதி, சவுராஷ்டிர மேல்நிலைப்பள்ளி மற்றும் ஐ.டி.ஐ., அரசு கல்லுாரி என தொடர்ந்து உள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு பள்ளிகளின் முன்பும் ரோட்டை கடக்கும் வகையில் வெள்ளை கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் நெடுஞ்சாலையில் ஏராளமான மகால்கள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், பஸ் ஸ்டாண்ட் என உள்ளது.
இதனால் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நெரிசல் அதிகமாக இருக்கும்.
மேலும் பள்ளி ஆரம்பிக்கும் மற்றும் முடியும் நேரங்களில் பல ஆயிரம் மாணவர்கள் நெடுஞ்சாலையை கடக்கும் நிலை உள்ளது.
இதனால் ஒவ்வொரு முறையும் ஆட்டோ, பள்ளி வாகனங்கள் உட்பட சைக்கிள் மற்றும் நடந்து செல்லும் மாணவர்கள் என விபத்து அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு பள்ளிகளின் முன்பும் போலீசார் கண்காணித்து போக்குவரத்தை சீர் செய்ய டி.எஸ்.பி., சபரிநாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.