/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சிறுவர்கள் விளையாட்டால் வைக்கோல் படப்பில் தீ சிறுவர்கள் விளையாட்டால் வைக்கோல் படப்பில் தீ
சிறுவர்கள் விளையாட்டால் வைக்கோல் படப்பில் தீ
சிறுவர்கள் விளையாட்டால் வைக்கோல் படப்பில் தீ
சிறுவர்கள் விளையாட்டால் வைக்கோல் படப்பில் தீ
ADDED : ஜூன் 10, 2024 06:17 AM

திருவாடானை, : திருவாடானை அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பு அருகே, சிறுவர்கள் கூட்டாஞ் சோறு வைத்து விளையாடினர்.
தீ வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் போது வைக்கோல் படப்பில் தீ பிடித்தது. காற்று வேகமாக வீசியதால் குடியிருப்பு வீடுகளுக்குள் பரவும் நிலை ஏறபட்டது. கோடனுார் ஊராட்சி தலைவர் காந்தி, நிலையத்திற்கு தகவலில் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையில் சென்ற வீரர்கள், மக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர்.