ADDED : ஜூலை 23, 2024 11:15 PM
பரமக்குடி : பரமக்குடியில் அனைத்து ரோடுகளிலும் மாடுகள் சுற்றி திரிகின்றன. நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் உட்பட பொது நல அமைப்பினர் தொடர்ந்து சுட்டிக் காட்டுகின்றனர்.
தினமலர் நாளிதழில் மாடுகளால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து சுட்டிக்காட்டப்படுகிறது. இந்நிலையில் நேற்று பாரதி நகர் கழிவுநீர் வாறுகாலில் பசுமாடு சிக்கியது. தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.