/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பழனிவலசை பகுதியில் காட்டுத்தீ 50 பனை மரங்கள் தீயில் கருகின பழனிவலசை பகுதியில் காட்டுத்தீ 50 பனை மரங்கள் தீயில் கருகின
பழனிவலசை பகுதியில் காட்டுத்தீ 50 பனை மரங்கள் தீயில் கருகின
பழனிவலசை பகுதியில் காட்டுத்தீ 50 பனை மரங்கள் தீயில் கருகின
பழனிவலசை பகுதியில் காட்டுத்தீ 50 பனை மரங்கள் தீயில் கருகின
ADDED : ஜூன் 19, 2024 05:30 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அருகே பழனிவலசையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் கருகின. ராமநாதபுரம் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்ததால் நுாற்றுக்கணக்கான பனை மரங்கள் தப்பின.
ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டை பகுதியில் உள்ள பழனிவலசை பகுதியில் அடர்த்தியான பனை மரக்காடுகள் உள்ளன. இங்கு நேற்று காலை 10:00 மணிக்கு ஏற்பட்ட தீ காற்றில் பரவியது. பனை மரக்கழிவுகள் கீழே கிடந்ததால் தீ சுற்றிலும் பரவியது.
ராமநாதபுரம் தீயணைப்புத்துறைக்கு தெரிவித்தனர். மாவட்ட உதவி அலுவலர் கோமதி அமுதா தலைமையிலான தீயணைப்புத்துறை அதிகாரிகள் மேலும் இருக்கும் பனை மரங்களில் தீப்பற்றாமல் இருக்க பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயில் கருகின. தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் நுாற்றுக்கணக்கான பனை மரங்கள் தப்பின.