/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பொக்கனாரேந்தலில் சமத்துவ எருதுகட்டு 50 காளைகள் பங்கேற்றன பொக்கனாரேந்தலில் சமத்துவ எருதுகட்டு 50 காளைகள் பங்கேற்றன
பொக்கனாரேந்தலில் சமத்துவ எருதுகட்டு 50 காளைகள் பங்கேற்றன
பொக்கனாரேந்தலில் சமத்துவ எருதுகட்டு 50 காளைகள் பங்கேற்றன
பொக்கனாரேந்தலில் சமத்துவ எருதுகட்டு 50 காளைகள் பங்கேற்றன
ADDED : ஜூன் 20, 2024 04:31 AM

திருப்புல்லாணி: -திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சி பொக்கனாரேந்தலில் மலை மேல் சாத்தார் உடையார் அய்யனார் கோயில் உள்ளது.
இங்குள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தனர்.
நேற்று காலை 11:00 மணிக்கு 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய வாடிவாசல் அமைந்துள்ள இடத்தில் சமத்துவ எருதுகட்டு விழா நடந்தது. மைதானத்தை சுற்றிலும் பார்வையாளர்கள் கண்டு ரசிக்க வட்டமாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.
ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர் பாட்ஷா போட்டியை துவக்கி வைத்தார்.
கோயிலுக்கு பாத்தியப்பட்ட அனைத்து கிராம பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
100மீ., நீளமுள்ள வடத்தின் ஒரு பகுதி மாட்டின் கழுத்திலும் மற்றொரு பகுதியை 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பிடித்தபடி மைதானத்தை வலம் வந்தனர். மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் காளைகளை அடக்கினர்.
கோயிலுக்கு பாத்தியப்பட்ட 22 கிராம மக்கள் மற்றும் குலதெய்வ குடிமக்கள், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாடு பிடிபடுவதைக் கண்டு ரசித்தனர்.
ஜல்லிக்கட்டு, எருதுகட்டு, வடமாடு உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.