/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உச்சிப்புளியில் 33 மூடைகள் பீடி இலை பறிமுதல் உச்சிப்புளியில் 33 மூடைகள் பீடி இலை பறிமுதல்
உச்சிப்புளியில் 33 மூடைகள் பீடி இலை பறிமுதல்
உச்சிப்புளியில் 33 மூடைகள் பீடி இலை பறிமுதல்
உச்சிப்புளியில் 33 மூடைகள் பீடி இலை பறிமுதல்
ADDED : ஜூன் 15, 2024 02:04 AM

உச்சிப்புளி:ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே வெள்ளரிஓடை பகுதியில் இலங்கைக்கு கடத்த வைக்கப்பட்டிருந்த 33 மூடைகள் பீடி இலையை கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட உள்ளதாக மண்டபம் மரைன் எஸ்.ஐ., யாசர் மவுலானாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் போலீசாருடன் வெள்ளரிஓடை கடற்கரை பகுதியில் ரோந்து சென்றார். அங்கு படகுகளில் ஏற்ற தயாராக 33 மூடைகளில் பீடி இலை இருந்தது.
அவற்றை யார், எங்கிருந்து கடத்தி வந்தனர். இலங்கைக்கு கடத்த இருந்தவர் யார் என தெரியவில்லை. பீடி இலைகளை புதுமடம் மரைன் போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். ஒவ்வொரு மூடையிலும் 28 முதல் 30 கிலோ வரை பீடி இலைகள் இருந்தன. மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.
புதுமடம் மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர். பீடி இலைகள் ராமநாதபுரம் சுங்கத்துறையினரிடம் விரைவில் ஒப்படைக்கப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.