/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வீடு கட்ட அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட 3 பேர் கைது வீடு கட்ட அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட 3 பேர் கைது
வீடு கட்ட அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட 3 பேர் கைது
வீடு கட்ட அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட 3 பேர் கைது
வீடு கட்ட அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட 3 பேர் கைது
ADDED : ஜூலை 04, 2024 11:26 PM

திருவாடானை:
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் வீடு கட்டுவதற்கு கட்டட அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட மூன்று பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தொண்டி அனிஷ்நகரை சேர்ந்தவர் அம்ஜத் அலி 55. வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவருக்கு புதிய வீடு கட்ட அனுமதி மற்றும் சொத்து வரி கட்டுவதற்காக அவரின் உறவினர்கள் முகமது இப்ராம்ஷா 41, நைனாமுகமது 40, தொண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கத்தை அணுகினர்.
அப்போது அவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலையில் நைனாமுகமது ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அளித்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் நேற்று மதியம் 2:00 மணிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக நைனாமுகமது பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றார்.
அப்போது அலுவலகத்தில் கம்யூட்டர் ஆப்பரேட்டராக பணியாற்றும் ( தற்காலிக பணியாளர்) தொண்டிராஜ் 33, மட்டும் இருந்தார். அவரிடம் பணம் கொண்டு வந்திருப்பதாக நைனாமுகமது கூறினார். அவர் என்னிடம் தாருங்கள் நான் கொடுத்து விடுகிறேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து தொண்டிராஜிடம் ரூ.20 ஆயிரத்தை கொடுத்த போது மறைந்திருந்த ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரன், போலீசார் தொண்டிராஜை கைது செய்தனர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம் 55, இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன் 51, ஆகியோரையும் கைது செய்தனர்.