/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் பஸ்களில் 23 பவுன் நகை திருட்டு பரமக்குடியில் பஸ்களில் 23 பவுன் நகை திருட்டு
பரமக்குடியில் பஸ்களில் 23 பவுன் நகை திருட்டு
பரமக்குடியில் பஸ்களில் 23 பவுன் நகை திருட்டு
பரமக்குடியில் பஸ்களில் 23 பவுன் நகை திருட்டு
ADDED : ஜூலை 02, 2024 10:13 PM
பரமக்குடி: பரமக்குடி பஸ்களில் பெண்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பரமக்குடி அருகே திருவரங்கம் பகுதி சிறுதாலை கிராமத்தைச் சேர்ந்தவர் வேணி 50. இவர் மே 23ல் பரமக்குடியிலிருந்து திருவரங்கம் செல்ல 11ம் நம்பர் டவுன் பஸ்சில் ஏறி உள்ளார். பஸ்சில் இருந்து இறங்கிய போது அணிந்திருந்த 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 11 பவுன் தங்கச் செயின் திருட்டு போனது தெரிந்தது.
* இதே போல் பரமக்குடி கருணாநிதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி 47. இவர் ஜூன் 7ல் பரமக்குடியில் இருந்து காளையார்கோவில் பஸ்சில் சென்றுள்ளார். இவர் அணிந்திருந்த 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 12 பவுன் தங்கச் செயின் காணாமல் போனது தெரிந்தது. வேணி மற்றும் சாந்தி புகாரில் பரமக்குடி டவுன் போலீஸ் எஸ்.ஐ., சரவணன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.