/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ ரூ.500 கோடி வரை சுருட்டிய மோசடி மன்னன் மீண்டும் கைது ரூ.500 கோடி வரை சுருட்டிய மோசடி மன்னன் மீண்டும் கைது
ரூ.500 கோடி வரை சுருட்டிய மோசடி மன்னன் மீண்டும் கைது
ரூ.500 கோடி வரை சுருட்டிய மோசடி மன்னன் மீண்டும் கைது
ரூ.500 கோடி வரை சுருட்டிய மோசடி மன்னன் மீண்டும் கைது
ADDED : செப் 13, 2025 02:10 AM

புதுக்கோட்டை:தமிழகம் முழுதும், 500 கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடியில் ஈடுபட்ட, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகியை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து, அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 50. இவர் நடத்திய சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளையில் பணம் செலுத்தினால், இரட்டிப்பு பணம் தருவதாகவும், வெளிநாட்டில் இருந்து வரும் பல லட்சம் கோடி ரூபாயில் பங்கு தருவதாகவும் கூறி, பொதுமக்களிடம் வசூல் செய்தார்.
இவ்வாறு ஐந்து ஆண்டுகளுக்கு முன், திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, சிவகங்கை ஆகிய மாவட்ட பொதுமக்களிடம், நுாற்றுக்கணக்கான ஏஜென்டுகள் நியமித்து, பல நுாறு கோடி ரூபாய் வசூலித்து, பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் புகாரில், நான்கு ஆண்டுகளுக்கு முன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
சில மாதங்களில் ஜாமினில் வந்தார். இந்நிலையில், மீண்டும் அதே பாணியில், பொதுமக்களிடமிருந்து நிதி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டு வந்தார்.
புதுக்கோட்டை சி.பி.சி.ஐ.டி., போலீசில் சிலர் ரவிச்சந்திரன் மீது புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, காரைக்குடியில் இருந்த ரவிச்சந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
குடுமியான்மலையில் உள்ள அவரது வீடு, அறக்கட்டளை அலுவலகம் ஆகியவற்றிலும் நேற்று காலை முதல் சோதனை ந டந்து வருகிறது.
திருச்சி, திருவானைக்காவல் துவாரகா அபார்ட்மென்டில் வசிக்கும் மாத இதழ் நடத்தி வரும் பாரதராஜா, 54, ரவிச்சந்திரனுக்கு ஆதரவாக பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து தந்துள்ளார்.இவரது வீட்டிலு ம், நேற்று காலை முதல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை மேற்கொண்டனர்.