/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ போலீஸ் காருக்கு அபராதம் பெண் காவலருக்கு பாராட்டு போலீஸ் காருக்கு அபராதம் பெண் காவலருக்கு பாராட்டு
போலீஸ் காருக்கு அபராதம் பெண் காவலருக்கு பாராட்டு
போலீஸ் காருக்கு அபராதம் பெண் காவலருக்கு பாராட்டு
போலீஸ் காருக்கு அபராதம் பெண் காவலருக்கு பாராட்டு
ADDED : ஜூன் 29, 2025 02:18 AM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாநகராட்சியில் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பரபரப்பான கீழ ராஜ வீதியில், 'போலீஸ்' என ஸ்டிக்கர் ஒட்டிய மாருதி கார், நோ பார்க்கிங் ஏரியாவில், சாலை நடுவில் நிறுத்தப்பட்டிருந்தது.
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் காரில் அமர்ந்திருந்த டிரைவரிடம், காரை எடுக்கும்படி கூறியும் கேட்கவில்லை.
கார் உரிமையாளர் அங்கு இல்லை. பின், பொதுமக்கள் அப்பகுதியில் இருந்த போக்குவரத்து எஸ்.ஐ., அழகர் என்பவரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து, எஸ்.ஐ., ஆலோசனையில், போக்குவரத்து பெண் போலீஸ் கஸ்துாரி, கார் டிரைவரை கண்டித்ததுடன் போக்குவரத்து விதிகளை மீறியதாக, 2,500 ரூபாய் அபராதம் விதித்தார். போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தும், கடமை உணர்வுடன் காருக்கு அபராதம் விதித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர். விசாரணையில், அந்த கார் புதுக்கோட்டை, வல்லத்திராக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் தினேஷ் என்பவருடையது என, தெரியவந்தது.