Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை

மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை

மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை

மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை

ADDED : செப் 22, 2025 06:43 AM


Google News
Latest Tamil News
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியில், மீன் வளத்தை பெருக்க, செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்பட உள்ளன.

தமிழக கடற்கரையோர மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக, கடலில் மீன் வளத்தை பெருக்க, செயற்கை பவளப்பாறைகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடலில் இயற்கையில் பவளப்பாறைகள் இருந்தாலும், போதுமான மீன் வளம் உற்பத்தியாவதில்லை. எனவே, சிமென்டால் பாறை போன்று வடிவமைக்கப்பட்டு, அதனை கடலில் குறிப்பிட்ட துாரத்தில் கொண்டு அமைக்கப்படும். அந்த செயற்கை பவளப்பாறைக்குள் மீன்கள் தங்கி இனப்பெருக்கம் செய்யும். மேலும், கடல் தாழைகள், புற்கள் செடிகள் வளரும். இதன் மூலம் கடலில் மீன்வளம் பெருகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்பகுதியில், 9 கோடி ரூபாயில் செயற்கை பவளப்பாறைகள் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விரைவில், புதுக்கோட்டை மாவட்டத்தில், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், குமரப்பன்வயல், ஆர்.புதுப்பட்டினம், கோபாலப்பட்டினம், அய்யம்பட்டினம், முத்துனேந்தல், முத்துக்குடா ஆகிய கிராமங்களின் கடற்பகுதியில், 8 நாட்டிக்கல் மைல் துாரத்தில், 5,760 செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்பட உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us