/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ அங்கன்வாடி ஊழியரை கட்டி போட்டு கொள்ளை அங்கன்வாடி ஊழியரை கட்டி போட்டு கொள்ளை
அங்கன்வாடி ஊழியரை கட்டி போட்டு கொள்ளை
அங்கன்வாடி ஊழியரை கட்டி போட்டு கொள்ளை
அங்கன்வாடி ஊழியரை கட்டி போட்டு கொள்ளை
ADDED : ஜூன் 17, 2025 12:55 AM

விராலிமலை; புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில், ஜூன் 6ல் வீட்டில் தனியாக இருந்த அங்கன்வாடி ஊழியர் நீலா, 48, என்பவரை கட்டிப்போட்டு, 15 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இது குறித்த புகாரில் விராலிமலை போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், வடுகப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு விராலிமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஒரு வாலிபரை பிடித்து விசாரித்த போது, விராலிமலையை சேர்ந்த தீபக், 20, என்பதும், அவர் அங்கன்வாடி ஊழியர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது.
அவர் நீலாவின் உறவினர் மகன். அவர் வெளிநாடு சென்று படிப்பதற்காக நீலாவிடம் பணம் கேட்டு தராததால், தன் நண்பர்கள் உதவியுடன் இச்சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது.
போலீசார் தீபக்கை கைது செய்தனர். தொடர்புடைய அவரது நண்பர்கள் இருவரை தேடி வருகின்றனர்.