ADDED : ஜூன் 30, 2024 02:27 AM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே நரங்கியன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள், 22; விவசாயம் செய்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த நர்சிங் முதலாமாண்டு படிக்கும், 17 வயது மாணவியை காதலிப்பதாக கூறி, அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மாணவியின் தாய், போலீசில் புகார் அளித்தார்.
கீரனுார் அனைத்து மகளிர் போலீசார், நேற்று முன்தினம் இரவு பெருமாளை போக்சோ வழக்கில் கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.