Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ தொழிலாளி அடித்து கொலை மனைவியின் உறவினர் கைது

தொழிலாளி அடித்து கொலை மனைவியின் உறவினர் கைது

தொழிலாளி அடித்து கொலை மனைவியின் உறவினர் கைது

தொழிலாளி அடித்து கொலை மனைவியின் உறவினர் கைது

ADDED : ஜூலை 03, 2024 02:08 AM


Google News
விராலிமலை:புதுக்கோட்டை, விராலிமலை அருகே சரளபள்ளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 40. இவர் கல்குத்தான்பட்டியில் உள்ள ஆறுமுகம் என்பவரின் செங்கல் சூளையில் தன் மனைவி இளஞ்சியம், 36, அவரது, தங்கை சின்னம்மாள், 25, அவரது கணவர் சின்னசாமி, 27, ஆகியோருடன், ஒரே வீட்டில் தங்கி, பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், சுப்பிரமணி மற்றும் இளஞ்சியம் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று காலையில், செங்கல் சூளைக்கு ஆறுமுகம் வந்தார். அப்போது, அங்கு சுப்பிரமணி பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சுப்பிரமணி உடலைக் கைப்பற்றி, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

போலீஸ் விசாரணையில், மனைவி இளஞ்சியத்தை, சுப்பிரமணி மது குடித்துவிட்டு வந்து அடித்த போது, அவரது தங்கை கணவர் சின்னசாமி தடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது, சுப்பிரமணி, சின்னசாமி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில், பலத்த காயமடைந்த சுப்பிரமணி இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, விராலிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, சின்னசாமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us