/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ மின்வாரிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் மின்வாரிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
மின்வாரிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
மின்வாரிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
மின்வாரிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூன் 19, 2024 02:10 AM

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் மின்வாரிய அலுவலகத்தில் 50க்கு மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
தமிழக மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், களப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. விரைவாக பதவி உயர்வு வழங்க வேண்டும். கடந்த மார்ச் மாதம், சிறப்பு நிலை ஆக்க முகவர், முதல் நிலை பதவிகளுக்கான பதவி உயர்வு பட்டியல் அனுமதிக்கப்பட்டது.
மற்ற பதவிகளுக்கான பட்டியல் அனுமதிக்கப்படாத நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த காரணத்தால், பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தவுடன் தங்களுக்கு பதவி உயர்வு கிடைத்துவிடும் என காத்திருந்த மின்வாரிய ஊழியர்கள், தற்போது, 10 நாட்கள் கடந்த நிலையில், சிறப்பு நிலை ஆக்க முகவர் பதவி உயர்வு மட்டும் கடந்த 12ம் தேதி வழங்கப்பட்டுள்ளது.
இது, முதல் நிலை பதவி உயர்வுக்கு அனுமதிக்கப்பட்டு காத்திருந்த தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.