/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ பாய்லரில் செத்து மிதந்த எலி டீ குடித்த ஏழு பேர் 'அட்மிட்' பாய்லரில் செத்து மிதந்த எலி டீ குடித்த ஏழு பேர் 'அட்மிட்'
பாய்லரில் செத்து மிதந்த எலி டீ குடித்த ஏழு பேர் 'அட்மிட்'
பாய்லரில் செத்து மிதந்த எலி டீ குடித்த ஏழு பேர் 'அட்மிட்'
பாய்லரில் செத்து மிதந்த எலி டீ குடித்த ஏழு பேர் 'அட்மிட்'
ADDED : ஜூலை 06, 2024 10:57 PM

திருக்கோகர்ணம்:புதுக்கோட்டை, புது அரண்மனை வீதியில், வாகன விற்பனை மையம் கட்டுமான பணிகள் நடக்கின்றன. இதில், 17 -- 27 வயதுடைய வாலிபர்கள் ஏழு பேர் பணியில் இருந்துள்ளனர். மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் செயல்பட்டு வரும் டீக்கடையில் டீ பார்சல் வாங்கி வந்து அவர்கள் குடித்தனர்.
டீ சுவையில் வித்தியாசம் தெரிந்ததால், அது குறித்து டீக்கடைக்காரரிடம் விசாரித்துள்ளனர். அப்போது, டீக்கடைகாரர், பாய்லரை திறந்து பார்த்த போது, அதில், அழுகிய நிலையில் எலி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதைக்கண்டு டீ குடித்த ஏழு பேரும் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் அந்த ஏழு பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
கோவில்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்த மாதிரி, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருக்கோகர்ணம் போலீசார் விசாரிக்கின்றனர்.