Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ புதுகையில் பலாப்பழங்கள் பழுத்து வீணாகும் அவலநிலை.

புதுகையில் பலாப்பழங்கள் பழுத்து வீணாகும் அவலநிலை.

புதுகையில் பலாப்பழங்கள் பழுத்து வீணாகும் அவலநிலை.

புதுகையில் பலாப்பழங்கள் பழுத்து வீணாகும் அவலநிலை.

ADDED : ஜூலை 17, 2024 06:53 PM


Google News
Latest Tamil News
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், பல பகுதிகளில் பலாப்பழங்களுக்கு உரிய விலை கிடைக்கததால், பலா பழங்கள் பழுத்து வீணாகி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, வடகாடு, மாங்காடு, நெடுவாசல், கொத்தமங்கலம், கீரமங்கலம் உட்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் பலா சாகுபடி பிரதானமாக உள்ளது. ஆண்டு முழுவதும் பலா மரத்தை பராமரித்து வரும் விவசாயிகள் குறிப்பிட்ட சீசனில் மட்டுமே அதற்கான மகசூலை பெறுவார்கள். இப்பகுதியில் விளையும் பலாப்பழங்கள் தனிச்சுவை கொண்டது என்பதால் சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு.

நன்கு விளைந்த பலாப்பழங்களை விவசாயிகள் பறித்து வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், ஆவணம் கைகாட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பலாப்பழ கமிஷன் கடைகள் மற்றும் ஏலக்கடைகள் மூலமாக எடை மற்றும் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். பெரிய வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து தமிழகம் முழுவதும், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்புகின்றனர்.

சீசன் நேரத்தில் நாள் ஒன்றுக்கு 300 டன் முதல் ஆயிரம் டன் வரை பலாப்பழம் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. பலா சாகுபடி விவசாயிகள் பலர், வறுமை காரணமாக, தங்களது மரங்களை ஆண்டுக்கணக்கில் குத்தகை அல்லது ஒத்திக்கு வழங்கி வருகின்றனர். டன் கணக்கில் பலாப்பழங்கள் உற்பத்தி ஆனாலும் கூட, இதன் மூலம் விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றமடையாத நிலையே நீடித்து வருகிறது.

தற்போது, சிறிய அளவிலான பலாப்பழம் ஒன்று ரூ.100 முதல் ரூ.200க்கும், பெரிய அளவிலான பலாப்பழம் ரூ.300 முதல் ரூ.400 வரையிலும் விலை போகிறது. விளைச்சல் அதிகரிக்கும்போது, உரிய விலை கிடைக்காத நேரங்களில் பழங்களை பறிக்காமல் மரத்திலேயே விவசாயிகள் விட்டுவிடுகின்றனர். இதனால் பழங்கள் மரத்திலேயே பழுத்து வீணாகிவருகின்றன. பழம் பறிக்க கூலி ஆட்கள் செலவு, சந்தைக்கு கொண்டு செல்ல வாகன வாடகை ஆகியவற்றை கணக்கிடும்போது, நஷ்டம் ஏற்படுவதே இதற்கு காரணமாகும் என்று விவசாயிகள் விரக்தியுடன் தெரிவிக்கின்றனர்.

இதை தவிர்க்க இப்பகுதியில் உற்பத்தியாகும் பலாப்பழங்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும், பலாப்பழத்தில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us