/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ இந்தியாவில் பைனான்ஸ், நிதி நிறுவனங்களால் பெண்கள் பெருமளவு பாதிப்பு: அகில இந்திய மாதர் சங்க நிர்வாகி வருத்தம் இந்தியாவில் பைனான்ஸ், நிதி நிறுவனங்களால் பெண்கள் பெருமளவு பாதிப்பு: அகில இந்திய மாதர் சங்க நிர்வாகி வருத்தம்
இந்தியாவில் பைனான்ஸ், நிதி நிறுவனங்களால் பெண்கள் பெருமளவு பாதிப்பு: அகில இந்திய மாதர் சங்க நிர்வாகி வருத்தம்
இந்தியாவில் பைனான்ஸ், நிதி நிறுவனங்களால் பெண்கள் பெருமளவு பாதிப்பு: அகில இந்திய மாதர் சங்க நிர்வாகி வருத்தம்
இந்தியாவில் பைனான்ஸ், நிதி நிறுவனங்களால் பெண்கள் பெருமளவு பாதிப்பு: அகில இந்திய மாதர் சங்க நிர்வாகி வருத்தம்
ADDED : ஜூலை 13, 2024 07:56 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்திய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி, பொதுச்செயலர் மரியன்பாபுலே ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் வாசுகி கூறியதாவது:
தமிழக மட்டுமல்ல இந்தியாவின் பல மாநிலங்களிலும் பெண்கள் சுயநிதி பைனான்ஸ், நிதி நிறுவனங்களால் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளனர். வாங்கிய கடனை கட்ட முடியாதவர்கள் நுண்நிதி நிறுவனங்கள் பல்வேறு தொந்தரவுகளை செய்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் புகாரை ஏற்றுக் கொள்வதற்கு காவல் துறையினர் தயாராக இல்லை. எனவே, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலங்களிலும் நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிப்பதற்கு சிறப்பு பிரிவு தொடங்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட 10,000 பெண்களிடம் ஆய்வு செய்து, அதன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறைந்த வட்டியில் பணம் கிடைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை வேண்டும்.
கள்ளச்சாராய சாவுகள் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. இதில், மிகப்பெரிய நெட்வொர்க்கே செயல்படுகிறது. உள்ளுர் காவல் துறை, வெளியூர் காவல் துறை அதிகாரவர்க்கம் ஆகியோர் இணைந்து தான் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளச்சாராயம் விற்பனை லாபம் ஈட்ட கூடிய இடமாக உள்ளது. இதனைத்தடுத்து நிறுத்தாமல் வெறும் சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. தற்போது, தமிழகத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் நவீன டாஸ்மார்க் சரக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனை தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கனவே, போதை கலாசாரத்தால் இளைஞர்கள் சீரழிக்கும் நிலையில், டாஸ்மார்க் கடையை குறைக்காமல் அதனை அதிகப்படுத்தும் விதமாகமன மகிழ் மன்றம் என்ற பெயரில் டாஸ்மார்க் மதுபான விற்பனை என்பது நடைபெற்று வருகிறது.
மதுவால் இறப்பவர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, அதிக அளவு ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும். சமீப காலமாக பள்ளி கல்லுாரி மாணவிகள் குடிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வருவது கவலை அளிக்கிறது.
இது ஆண், பெண் என்று பார்க்காமல் இருவரையும் ஒரே சமமாக பார்த்து குடிப்பழக்கத்தை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.