/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ மணல் கடத்தலை தடுக்க சென்ற ஆர்.டி.ஓ.,வை கொல்ல முயற்சி மணல் கடத்தலை தடுக்க சென்ற ஆர்.டி.ஓ.,வை கொல்ல முயற்சி
மணல் கடத்தலை தடுக்க சென்ற ஆர்.டி.ஓ.,வை கொல்ல முயற்சி
மணல் கடத்தலை தடுக்க சென்ற ஆர்.டி.ஓ.,வை கொல்ல முயற்சி
மணல் கடத்தலை தடுக்க சென்ற ஆர்.டி.ஓ.,வை கொல்ல முயற்சி
ADDED : ஜூன் 15, 2024 02:01 AM
அன்னவாசல்:புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வருவாய் கோட்டாச்சியர் தெய்வநாயகி. இவர், தன் உதவியாளர் ராஜேந்திரன், டிரைவர் கனகபாண்டியன் ஆகியோருடன் நேற்று அலுவலகப்பணி காரணமாக, தனியார் ஹூண்டாய் காரில் பொன்னமராவதி தாலுகா ஆலவயல் கிராமத்திற்கு சென்று விட்டு, மீண்டும் இலுப்பூர் நோக்கி வந்தார்.
அப்போது, மணல் கடத்தல் நடப்பதாக கிடைத்த தகவலின் படி, இலுப்பூர் தாலுகா வளையப்பட்டி அரசு பள்ளி அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த மினி லாரியை வருவாய் கோட்டாச்சியர் நிறுத்தி சோதனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
அந்த வாகனத்தில் இருந்த இரண்டு நபர்கள் ஆர்.டி.ஒ.,வை கொலை செய்யும் நோக்கத்துடன், அவர்கள் சென்ற காரின் வலது பக்கமாக மோதியுள்ளனர். அதில் கார் சேதமடைந்தது. பின்னர், மீண்டும் மினிலாரியை பின்நோக்கி எடுத்து, காரின் மீது மோத வந்த போது, காரை டிரைவர் கனகபாண்டியன் இடது பக்கமாக திருப்பியதால், மூவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். அன்னவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.