ADDED : ஜூன் 21, 2025 10:45 PM
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டையைச் சேர்ந்தவர் மாமலைவாசன், 23. இவருடன் தாய் சுகுணா வசித்து வந்தார். 9ம் தேதி தாய்க்கும், மகனுக்கும் ஏற்பட்ட தகராறில் சுகுணாவின் கழுத்தை நெரித்ததில் அவர் இறந்தார்.
உடல்நலக் குறைவால் சுகுணா இறந்து விட்டதாகக் கூறி, உடலை அடக்கம் செய்தனர். சுகுணா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் வந்ததால், போலீசார், மாமலைவாசனிடம் விசாரித்ததில், தாயை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அரும்பாவூர் போலீசார், மாமலைவாசனை கைது செய்தனர்.