/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ உறவினரின் ஏ.டி.எம்., கார்டை திருடி ரூ.19 லட்சம் எடுத்த தம்பதி கைது உறவினரின் ஏ.டி.எம்., கார்டை திருடி ரூ.19 லட்சம் எடுத்த தம்பதி கைது
உறவினரின் ஏ.டி.எம்., கார்டை திருடி ரூ.19 லட்சம் எடுத்த தம்பதி கைது
உறவினரின் ஏ.டி.எம்., கார்டை திருடி ரூ.19 லட்சம் எடுத்த தம்பதி கைது
உறவினரின் ஏ.டி.எம்., கார்டை திருடி ரூ.19 லட்சம் எடுத்த தம்பதி கைது
ADDED : செப் 17, 2025 01:20 AM
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், ஒகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 59. வெளிநாட்டில் பணியாற்றிய இவர், 2019ல் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சொந்த ஊர் திரும்பினார். இவருக்கு சிலம்பரசன், 31, ராஜசேகர், 28, என, இரு மகன்கள் உள்ளனர்.
ராஜேந்திரன் பணியாற்றிய வெளிநாட்டு நிறுவனம், 19.09 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை, அவரின் வங்கியில் செலுத்தியது. இதை, ராஜேந்திரனின் மருமகளான, மூத்த மகன் சிலம்பரசனின் மனைவி கவுசல்யா மற்றும் உறவினர்கள் சிலர், ராஜேந்திரனின் ஏ.டி.எம்., கார்டை திருடி பணத்தை எடுத்து கொண்டனர்.
இதையறிந்த ராஜேந்திரன், அவர்களிடம் பணத்தைக் கேட்டபோது, தர மறுத்து விட்டனர். இதுகுறித்து, பெரம்பலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, பணத்தை மோசடியாக எடுத்த ஒகளூர் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல், 65, அவரது மனைவி ராஜேஸ்வரி, 53, ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், இவர்களின் மகன் அருண், கவுசல்யா ஆகியோரை தேடி வருகின்றனர்.