/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ வனத்தில் வேட்டையாட முயன்றோருக்கு அபராதம் வனத்தில் வேட்டையாட முயன்றோருக்கு அபராதம்
வனத்தில் வேட்டையாட முயன்றோருக்கு அபராதம்
வனத்தில் வேட்டையாட முயன்றோருக்கு அபராதம்
வனத்தில் வேட்டையாட முயன்றோருக்கு அபராதம்
ADDED : ஜூலை 10, 2024 02:15 AM
அம்மாபாளையம்:பெரம்பலுார் வனச்சரகம் அம்மாபாளையம் பிரிவுக்கு உட்பட்ட குரும்பலுார் ஏரிக்கரை அருகே, வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் திரிந்தவரை, போலீசில் ஒப்படைத்தனர்.
அவர் தம்பிரான்பட்டி கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்த கமலக்கண்ணன், 37, என்பதும், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி, வனவிலங்குகளை வேட்டையாடி வந்ததும் தெரிந்தது. கமலக்கண்ணனை போலீசார் கைது செய்து, நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
இதேபோல, பாளையம் கிராமத்தில் வனச்சரக அலுவலர் பழனிகுமார் தலைமையில் வனத்துறையினர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதாக, அதே கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், 27, ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார், 19, திண்ணனுாரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, 30, ஆகியோரை பிடித்து மொத்தம் 1.50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.