/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ கொலை வெறி தாக்குதல்; நான்கு பேர் கைது கொலை வெறி தாக்குதல்; நான்கு பேர் கைது
கொலை வெறி தாக்குதல்; நான்கு பேர் கைது
கொலை வெறி தாக்குதல்; நான்கு பேர் கைது
கொலை வெறி தாக்குதல்; நான்கு பேர் கைது
ADDED : ஜூலை 02, 2024 05:19 AM
நாவலுார் : பெரம்பலுார் மாவட்டம், நாவலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ்- - காந்தாயி தம்பதியின் மகன் வெங்கடேசன், 28, கேட்டரிங் படித்துள்ளார். திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்தார். இதனால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரின் கை, கால்களை கட்டிப்போட்டு நான்கு பேர் போதை கும்பல், சில நாட்களாக, சரமாரியாக கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இது குறித்த வீடியோ தற்போது பரவி வருகிறது.
தாக்குதலுக்கு ஆளான வெங்கடேசனை, சில நாட்களாக காணவில்லை என, அவரது தாய் காந்தாயி தெரிவித்துள்ளார். எனினும், போலீசில் புகார் கூறவில்லை.
போலீசார் நடத்திய விசாரணையில், சில தினங்களுக்கு முன் நாவலுார் கிராமத்தில் வி.சி., கட்சியினர் வைத்த போர்டை, வெங்கடேசன் அகற்றியதால், அதே ஊரை சேர்ந்த முருகவேல், 33, அருண், 30, சுரேஷ், 38, உள்ளிட்ட நால்வர் அவரை கட்டி போட்டு தாக்கியது தெரிந்தது. இன்ஸ்பெக்டர் கருணாகரன், அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து, வெங்கடேசன் குறித்து விசாரித்து வருகிறார்.