ரூ.20.82 லட்சம் மோசடி; வாலிபர் கைது
ரூ.20.82 லட்சம் மோசடி; வாலிபர் கைது
ரூ.20.82 லட்சம் மோசடி; வாலிபர் கைது
ADDED : மே 24, 2025 06:21 AM
பாலக்காடு : வீட்டில் இருந்தபடியே, 'ஆன்லைன்' வாயிலாக பணம் சம்பாதிக்கலாம் என, நம்ப வைத்து, 20.82 லட்சம் ரூபாயை மோசடி செய்த வழக்கில், சைபர் பிரிவு போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பிராயிரி சேர்ந்தவர், 'ஆன்லைன்' வாயிலாக 'ஷேர் டிரேடிங்' செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறி ஏமாற்றி, 20.82 லட்சம் ரூபாய் பணம் பறித்து ஏமாற்றி விட்டனர், என, பாலக்காடு சைபர் குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், மாவட்ட எஸ்.பி., அஜித்குமார் அறிவுரையின்படி, டி.எஸ்.பி., பிரசாத் மேற்பார்வையில் சைபர் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையில் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டம் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த அப்துல் ஹலீம், 23, என்பவரை நேற்று கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் சசிக்குமார் கூறியதாவது:
கடந்த, 2024 செப்., மாதம் முதல் 2025 மார்ச் வரையிலான காலத்தில், இந்த சம்பவம் நடந்துள்ளனது. 'டெலிகிராம்' செயலி வாயிலாக, புகார்தாரரை தொடர்பு கொண்டு வீட்டிலிருந்தபடியே 'ஷேர் டிரேடிங் ' செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளனர்.
அதற்காக, அவ்வப்போது 'டெபாசிட்' தொகையாக, 20.82 லட்சம் ரூபாயை வாங்கி, அப்துல் ஹலீம் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.
இவ்வழக்கு தொடர்பாக, மேலும் சிலர் கைதாக வாய்ப்பு உள்ளது. தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.