/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/'உன் அப்பன் வீட்டு வண்டியா?' அரசு பஸ் டிரைவர் 'அட்ராசிட்டி''உன் அப்பன் வீட்டு வண்டியா?' அரசு பஸ் டிரைவர் 'அட்ராசிட்டி'
'உன் அப்பன் வீட்டு வண்டியா?' அரசு பஸ் டிரைவர் 'அட்ராசிட்டி'
'உன் அப்பன் வீட்டு வண்டியா?' அரசு பஸ் டிரைவர் 'அட்ராசிட்டி'
'உன் அப்பன் வீட்டு வண்டியா?' அரசு பஸ் டிரைவர் 'அட்ராசிட்டி'
ADDED : ஜன 07, 2024 01:32 AM

பந்தலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார் அரசு போக்குவரத்து கழக கிளை ஓட்டுனர் பன்னீர்செல்வம். இவர் பந்தலுார் மற்றும் பாட்டவயல் வழியாக, மாநில எல்லையான அய்யன் கொல்லி செல்லும் அரசு பஸ்சை ஓட்டினார்.
நேற்று முன்தினம் மாலை, கூடலுாரில் இருந்து அய்யன்கொல்லி சென்றபோது, ஒரு பஸ் நிறுத்தத்தில், பெண் பயணி ஒருவர் குழந்தையுடன் நின்று கையை நீட்டி, நிறுத்துமாறு கூறியுள்ளார்.
டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றார். பின்னால் வந்த ஆட்டோவில் ஏறி, அய்யன்கொல்லி சென்ற அந்த பெண், பஸ் டிரைவரிடம், 'நான் பஸ்சை நிறுத்துமாறு கூறி கை காட்டினேன்; ஏன் நிறுத்தவில்லை' என, கேட்டுள்ளார்.
அப்போது, பன்னீர்செல்வம், அந்த பெண்ணிடம், 'கை காட்டினால் பஸ்சை நிறுத்த முடியாது; இது உன் அப்பன் வீட்டு வண்டியா?' என, தரக்குறைவாக பேசி உள்ளார்.
இதை, 'வீடியோ' எடுத்த சிலர் சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். அரசு பஸ் டிரைவர் மீது, நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
கூடலுார் அரசு போக்குவரத்து கிளை மேலாளர் அருள் கண்ணன் கூறுகையில், ''டிரைவரின் ஒழுங்கீன செயல் குறித்து, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.