/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மத்திய இணை அமைச்சர் முருகன் அரங்கநாதர் கோவிலில் வழிபாடுமத்திய இணை அமைச்சர் முருகன் அரங்கநாதர் கோவிலில் வழிபாடு
மத்திய இணை அமைச்சர் முருகன் அரங்கநாதர் கோவிலில் வழிபாடு
மத்திய இணை அமைச்சர் முருகன் அரங்கநாதர் கோவிலில் வழிபாடு
மத்திய இணை அமைச்சர் முருகன் அரங்கநாதர் கோவிலில் வழிபாடு
ADDED : பிப் 23, 2024 10:52 PM

மேட்டுப்பாளையம்:மத்திய இணை அமைச்சர் முருகன், காரமடை அரங்கநாதர் கோவிலிலும், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலிலும் வழிபாடு செய்தார்.
மத்திய கால்நடை, மீன்வளம் மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் முருகன், மேட்டுப்பாளையத்தில், அமைச்சக முகாம் அலுவலகத்தை திறந்துள்ளார். முகாம் அலுவலகத்திற்கு வந்து பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வருகிறார்.
மேட்டுப்பாளையம் காரமடை சாலையில், ஸ்டேட் பேங்க் அருகே, தேர்தல் பணிமனை அலுவலகம், பா.ஜ., சார்பில் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை இந்த அலுவலகத்திற்கு வந்த அமைச்சர் முருகன், கட்சி நிர்வாகிகளுடன், தேர்தல் பணிகள் எவ்வாறு செய்வது என்பது குறித்து, ஆலோசனை செய்தார். அதன்பின், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கும், காரமடை அரங்கநாதர் கோவிலுக்கும் சென்று சுவாமியை வழிபட்டார்.
அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள், அமைச்சரை வரவேற்றனர்.
அமைச்சருடன் கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, நீலகிரி லோக்சபா தொகுதி பொறுப்பாளர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் உடன் வந்தனர்.