ADDED : செப் 09, 2025 09:52 PM
குன்னுார்; குன்னுார் ஜெகதளா பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஷாயிரா பானு, 43. இவர் நேற்று காலை காந்தி நகர் வழியாக அருவங்காடு நோக்கி நடந்து வந்துள்ளார். அப்போது தேயிலை தோட்டம் அருகே இருந்த ஒற்றை காட்டெருமை தாக்கியதில் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
தகவலின் பேரில், தனியார் ஆம்புலன்ஸ் மூலம், ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முதுகு பகுதியில் காயமடைந்த நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டபெட்டு வனச்சரகர் சீனிவாசன் மேற்பார்வையில், வனத்துறையினர், போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.