/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டி நகருக்கான குடிநீர் வினியோக பிரச்னைக்கு... விடிவு பிறக்குமா.. . ? வனத்துறை அனுமதி கிடைத்தால் தீர்வு நிச்சயம் ஊட்டி நகருக்கான குடிநீர் வினியோக பிரச்னைக்கு... விடிவு பிறக்குமா.. . ? வனத்துறை அனுமதி கிடைத்தால் தீர்வு நிச்சயம்
ஊட்டி நகருக்கான குடிநீர் வினியோக பிரச்னைக்கு... விடிவு பிறக்குமா.. . ? வனத்துறை அனுமதி கிடைத்தால் தீர்வு நிச்சயம்
ஊட்டி நகருக்கான குடிநீர் வினியோக பிரச்னைக்கு... விடிவு பிறக்குமா.. . ? வனத்துறை அனுமதி கிடைத்தால் தீர்வு நிச்சயம்
ஊட்டி நகருக்கான குடிநீர் வினியோக பிரச்னைக்கு... விடிவு பிறக்குமா.. . ? வனத்துறை அனுமதி கிடைத்தால் தீர்வு நிச்சயம்
ADDED : ஜூன் 20, 2025 06:35 AM

ஊட்டி: 'ஊட்டி நகராட்சி நிர்வாகம், மின்வாரியம் இணைந்து நிலத்தடி மின் கேபிள் திட்டத்தை விரைவில் செயல்படுத்தி, குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. 1.30 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஊட்டி நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பார்சன்ஸ் வேலி உட்பட, 7 அணைகளில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
அதில், பார்சன்ஸ் வேலி அணை, பெரும்பாலான வார்டு மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. மின்சார உதவியுடன் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. பருவ மழையின் போது வீசும் பலத்த காற்றுக்கு மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்து மின்தடை ஏற்படும் சமயத்தில், ஜெனரேட்டர் உதவியுடன் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
உள்ளூர் மக்கள் தவிப்பு
இந்நிலையில், இங்கு பொருத்தப்பட்ட ஜெனரேட்டர்களில் இரண்டு செயல்பாட்டில் உள்ளன. கூடுதலாக நகராட்சி சார்பில் புதிய ஜெனரேட்டர் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டில் உள்ள ஜெனரேட்டர்களில் டீசல் நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், மழை காலங்களில் குடிநீர் வியோகத்தில் சிக்கல் ஏற்படுகிறது.
சமீபத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையின் போது, அப்பகுதியில் மரங்கள் விழுந்து மின்தடை ஏற்பட்டது. 20 நாட்களுக்கு மேலாக பார்சன்ஸ்வேலி குடிநீரை நம்பியுள்ள, பல வார்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அதிக கட்டணம் கொடுத்து தனியாரிடம் குடிநீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அனுமதிக்கு காத்திருக்கிறோம்
பொதுமக்கள் கூறுகையில்,'கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக பார்சன்ஸ் வேலி நீரேற்று மையத்துக்கு செல்லும் மின் கம்பிகள் மீது அடிக்கடி மரங்கள் விழுந்து மின்தடை ஏற்பட்டதால், முறையாக குடிநீர் கிடைக்கவில்லை.
ஊட்டி நகர மக்களின் தண்ணீர் பிரச்னையை போக்க நிலத்தடி மின் இணைப்பு திட்டத்தை விரைவில் கொண்டு வர நகராட்சி நிர்வாகமும், மின்வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்திற்காக மாநில அரசு, 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை முறையாக பயன்படுத்தி நிலத்தடி மின் கேபிள் பதித்து நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.
இந்நிலையில், பார்சன் வேலி அணையை நகராட்சி கமிஷனர் வினோத், நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார், பொறியாளர் சேகரன் மற்றும் கவுன்சிலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
நகராட்சி கமிஷனர் வினோத் கூறுகையில், ''பார்சன்ஸ் வேலி அணைக்கு மிக அருகில் உள்ள காட்டு குப்பை துணை மின் நிலையத்திலிருந்து நிலத்தடியில் இருந்து நீரேற்று மையத்துக்கு மின் கேபிள்களை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வனத்தில், 4 கி. மீ., துாரத்துக்கு மின் கேபிள் பதிக்க வேண்டும். அதற்கு வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும். விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என நம்புகிறோம். கிடைத்தவுடன் நிலத்தடி மின்சார இணைப்பு நீரேற்று மையத்துக்கு வழங்கப்படும். அதன் பின் மின்சார பிரச்னை இருக்காது குடிநீரும் தடையின்றி வினியோகிக்க முடியும்,'' என்றார்.