/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வனவிலங்கு நடமாட்டம்; இரவு பணி நேரம் குறையுமா? வனவிலங்கு நடமாட்டம்; இரவு பணி நேரம் குறையுமா?
வனவிலங்கு நடமாட்டம்; இரவு பணி நேரம் குறையுமா?
வனவிலங்கு நடமாட்டம்; இரவு பணி நேரம் குறையுமா?
வனவிலங்கு நடமாட்டம்; இரவு பணி நேரம் குறையுமா?
ADDED : செப் 11, 2025 09:15 PM
குன்னுார்; குன்னுாரில் டாஸ்மாக் குடோன் அலுவலகம் முன்பு, டாஸ்மாக் ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தலைமை வகித்த நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆல்தொரை பேசுகையில்,''டாஸ்மாக் கடையில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்துக்கு டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்துவதை, நிர்வாகம் கைவிட வேண்டும்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு, பணி நிரந்தரம் தொடர்பான கோர்ட் உத்தரவுகளை செயல்படுத்தவும், அரசு மேல் முறையீடு செய்வதை தவிர்க்கவும் வேண்டும்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ., மருத்துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நீலகிரியில் வனவிலங்கு தாக்குதல் அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டாஸ்மாக் இரவு பணி நேரத்தை குறைக்க வேண்டும். குன்னுாரில் உள்ள டாஸ்மாக் குடோனை ஊட்டிக்கு மாற்ற வேண்டும்,'' என்றார். பொது செயலாளர் மகேஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
குடோன் சுமைப்பணி நிர்வாகி ரமேஷ்,தியாகராஜ், ராமையா, செந்தில், தேவராஜ், நந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். தேவசேனாதிபதி நன்றி கூறினார்.