/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையை அடிக்கடி கடக்கும் காட்டு யானைகள்: எச்சரிக்கையுடன் வாகனம் இயக்க அறிவுரை குன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையை அடிக்கடி கடக்கும் காட்டு யானைகள்: எச்சரிக்கையுடன் வாகனம் இயக்க அறிவுரை
குன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையை அடிக்கடி கடக்கும் காட்டு யானைகள்: எச்சரிக்கையுடன் வாகனம் இயக்க அறிவுரை
குன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையை அடிக்கடி கடக்கும் காட்டு யானைகள்: எச்சரிக்கையுடன் வாகனம் இயக்க அறிவுரை
குன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையை அடிக்கடி கடக்கும் காட்டு யானைகள்: எச்சரிக்கையுடன் வாகனம் இயக்க அறிவுரை
ADDED : மார் 18, 2025 09:33 PM

குன்னுார்:
'குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் முகாமிட்ட யானைகள், அவ்வப்போது சாலையை கடப்பதால், முன்னெச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும்,' வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல நாட்களுக்குப் பிறகு, கடந்த நான்கு நாட்களாக மீண்டும், 7 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. சில சமயங்களில் இவை உணவு மற்றும் தண்ணீருக்காக சாலையை கடந்து செல்கின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலை கே.என்.ஆர்., முருகன் கோவில் அருகே, ஒற்றை யானை சாலையை கடந்து சென்றது. அப்போது, வாகனங்களில் வந்தவர்கள் ஆங்காங்கே நிறுத்தி வழிவிட்டனர். இதேபோல, மற்ற யானைகள் குரும்பாடி அருகே முகாமிட்டுள்ளது. தொடர்ந்து வனத்துறையினர் இந்த பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'யானைகள் அவ்வப்போது சாலையை கடக்கும் என்பதால், வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்,' என்றனர்.