/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அரசு பஸ் கண்ணாடியை சேதப்படுத்திய காட்டு யானை அரசு பஸ் கண்ணாடியை சேதப்படுத்திய காட்டு யானை
அரசு பஸ் கண்ணாடியை சேதப்படுத்திய காட்டு யானை
அரசு பஸ் கண்ணாடியை சேதப்படுத்திய காட்டு யானை
அரசு பஸ் கண்ணாடியை சேதப்படுத்திய காட்டு யானை
ADDED : செப் 12, 2025 11:14 PM

கூடலுார்; கூடலுார் ஓவேலி மூலக்காடு சாலையில், காட்டு யானை, அரசு பஸ் கண்ணாடியை சேதப்படுத்திய சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் ஓவேலி பகுதியில், ஊருக்குள் வரும் காட்டு யானைகளால், மனித - - யானைகள் மோதல் அதிகரித்துள்ளது.
இங்கு, 9ம் தேதி, குயின்ட் சாலையில் குட்டியுடன் வந்த காட்டு யானை, ஸ்கூட்டரில் சென்ற இருவரை தாக்கியது. அதில், மெகபூப்,38, என்பவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், ஓவேலி மூலக்காடு பகுதியிலிருந்து, நேற்று காலை, 6:15 மணிக்கு பயணி ஒருவருடன் அரசு பஸ் கூடலுார் நோக்கி வந்தது.
அப்போது, மூலக்காடு பாலம் அருகே, திடீரென ஆக்ரோஷமாக சாலைக்கு வந்த காட்டு யானையை பார்த்து, டிரைவர் கவுசத் பஸ்சை நிறுத்தினார். ஆக்ரோஷமாக ஓடி வந்த யானை பஸ்சின் முன் கண்ணாடியை சேதப்படுத்தியது.
ஓட்டுனர், தொடர்ச்சியாக 'ஹாரன்' அடிக்க, நடத்துனர் மணிகண்டனும், பயணியும் சப்தமிட்டதால், யானை வனப்பகுதிக்குள் சென்றது.
மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் காட்டு யானை தாக்கி இரண்டு மாதத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இருவர் காயமடைந்துள்ளனர். தற்போது, அரசு பஸ்சை சேதப்படுத்தியுள்ளது. தொடரும் இப்பிரச்னைக்கு வனத்துறையினர் தீர்வு காண வேண்டும்,'என்றனர்.