/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மனைவி நல வேட்பு தினம்; அன்பை பரிமாறிய தம்பதியர் மனைவி நல வேட்பு தினம்; அன்பை பரிமாறிய தம்பதியர்
மனைவி நல வேட்பு தினம்; அன்பை பரிமாறிய தம்பதியர்
மனைவி நல வேட்பு தினம்; அன்பை பரிமாறிய தம்பதியர்
மனைவி நல வேட்பு தினம்; அன்பை பரிமாறிய தம்பதியர்
ADDED : செப் 18, 2025 08:40 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே கொளப்பள்ளி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், தவ மையங்கள் இணைந்து மனைவி நல வேட்பு தினத்தை கொண்டாடினர்.
'ஸ்கை' யோகா தவமைய பொறுப்பாளர் விஜயா மதியழகன் வரவேற்று பேசினார்.
கொளப்பள்ளி மணவளக்கலை மன்ற செயலாளர் ராஜேந்திரன் சுசிலா தலைமை வகித்து பேசுகையில், ''கணவன் மனைவி உறவு என்பது எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல், சுயநலம் இன்றி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழும் ஒரு சிறப்பான வாழ்க்கையாகும்.
நாகரிக வளர்ச்சி மற்றும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்தல் காரணமாக, குடும்பங்களில் யாரும் பேசிக்கொள்ள கூட நேரம் ஒதுக்காத சூழல் உருவாகி வருகிறது. வீட்டை காக்கும் மனைவியின் தியாகத்தை கணவன் மதித்து அன்புடன் வாழ வேண்டும்,'' என்றார். தொடர்ந்து. அறக்கட்டளை தலைவர் சிவமாலை செல்வராஜ் தவத்தின் வலிமை குறித்து பேசினார். சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் கணேசன் உயிர்காப்பு தவத்தை நடத்தினார்.
தம்பதிகள் ரோஜா பூ மற்றும் ஆப்பிள் பழம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, இரு தரப்பினரும் கைகளை பற்றிக்கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், தம்பதியர், செல்வகுமார்;செல்வராணி ஆகியோர் மகிழ்ச்சியான வாழ்வியல் முறை குறித்து பேசினர். பொருளாளர் சரோஜா நன்றி கூறினார்.