Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஓராண்டாகியும் எதுவும் அமலாகவில்லை சொன்னது என்ன ஆச்சு?கிராம சபை கூட்டத்தில் சரமாரி கேள்வி

ஓராண்டாகியும் எதுவும் அமலாகவில்லை சொன்னது என்ன ஆச்சு?கிராம சபை கூட்டத்தில் சரமாரி கேள்வி

ஓராண்டாகியும் எதுவும் அமலாகவில்லை சொன்னது என்ன ஆச்சு?கிராம சபை கூட்டத்தில் சரமாரி கேள்வி

ஓராண்டாகியும் எதுவும் அமலாகவில்லை சொன்னது என்ன ஆச்சு?கிராம சபை கூட்டத்தில் சரமாரி கேள்வி

ADDED : பிப் 23, 2024 10:46 PM


Google News
Latest Tamil News
அன்னுார்:முதல்வர் அறிவித்து, ஓராண்டாகியும், எந்த அறிவிப்பும் அமலாகவில்லை என, கிராம சபை கூட்டத்தில் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.

அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில், 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த 2022 ஏப்., 1 முதல் 2023 மார்ச் 31 வரை நடந்த பணிகளுக்கு, வட்டார வள அலுவலர் கனகராஜ் தலைமையில், நான்கு நாட்கள் சமூக தணிக்கை நடந்தது.

சமூக தணிக்கை அறிக்கை நேற்று கஞ்சப்பள்ளியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஊராட்சித் தலைவர் சித்ரா தலைமை வகித்தார். ஒன்றிய மேற்பார்வையாளர் உபைத் ரகுமான் முன்னிலை வகித்தார்.

கடந்த ஓராண்டில், 78 லட்சத்து 50 ஆயிரத்து 136 ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்பட்ட, 43 பணிகள் குறித்த தணிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது. ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன.

பட்டினி போராட்டம்


தொழிலாளர்கள் பேசுகையில், 'கடந்த ஆண்டு, நவ., 10ம் தேதி கடைசியாக சம்பளம் வழங்கப்பட்டது. அதன்பின், இதுவரை ஒரு ரூபாய் கூட சம்பளம் வழங்கவில்லை. வீட்டில் உணவுக்கு கூட வழியில்லை. ஊராட்சி அலுவலகத்திலும், ஒன்றிய அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. 100 நாள் வேலைத்திட்டத்தில், 150 நாள் வேலை வழங்கப்படும் என, கடந்த ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், முதல்வர் அறிவித்து ஓராண்டாகியும், இதுவரை அமல்படுத்தவில்லை.

'சிறப்பு நிதியை ஒதுக்கி எங்களைப் போல் ஏழை தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக பட்டினியுடன் போராடி வருகிறோம்' என்றனர்.

ஊராட்சி நிர்வாகிகள் பதிலளிக்கையில், 'உங்கள் கோரிக்கை மற்றும் புகார் குறித்து ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கிறோம்' என்றனர். வார்டு உறுப்பினர்கள், திட்ட மேற்பார்வையாளர்கள், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us