/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வீரம் விதைக்கும் புண்ணிய பூமி வெலிங்டன்: கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவில் பெருமிதம்வீரம் விதைக்கும் புண்ணிய பூமி வெலிங்டன்: கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவில் பெருமிதம்
வீரம் விதைக்கும் புண்ணிய பூமி வெலிங்டன்: கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவில் பெருமிதம்
வீரம் விதைக்கும் புண்ணிய பூமி வெலிங்டன்: கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவில் பெருமிதம்
வீரம் விதைக்கும் புண்ணிய பூமி வெலிங்டன்: கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவில் பெருமிதம்
ADDED : ஜன 03, 2024 11:38 PM

குன்னுார் : குன்னுார் வெலிங்டன் பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
குன்னுார் அருகே வெலிங்டன் ராணுவ பகுதியில், ராணுவ முதல் பீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷா சிலை உட்பட ராணுவ தளபதிகள், ராணுவ வீரர்களின் படங்கள், போர்களில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், வாள், போன்றவை காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட, சுதந்திர போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கடந்த, 2012ம் ஆண்டு செப். 26ல் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில், ராணுவ மருத்துவமனை முன்பு, 6.5 லட்சம் ரூபாய் செலவில், கற்சிலை வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று வீரபாண்டிய கட்டபொம்மனின், 264வது பிறந்த நாளையொட்டி, நீலகிரி மக்கள் நற்பணி மையம் சார்பில், இவரின் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. குன்னுார் தாசில்தார் கனி சுந்தரம் தலைமை வகித்தார். விழாவில், கன்டோன்மென்ட் முன்னாள் துணை தலைவர் வினோத்குமார் பேசுகையில், ''நாட்டின் பாதுகாப்புக்கான ராணுவ வீரர்களை உருவாக்கும் வீரம் விளைவிக்கும் ராணுவத்தின் புண்ணிய பூமியான வெலிங்டனில், கட்டபொம்மனுக்கு சிலை வைத்து பிறந்தநாள் விழா கொண்டாடுவது பெருமை அளிக்கிறது,'' என்றார்.
விழாவில், ஊராட்சி தலைவர்கள் ஜெகதீசன் (பேரட்டி), முருகன் (எடப்பள்ளி), ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம், நீலகிரி மக்கள் நற்பணி மைய கவுரவ தலைவர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.