/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தோட்டக்கலை சார்பில் ரூ. 6.79 கோடி நலத்திட்ட உதவி தோட்டக்கலை சார்பில் ரூ. 6.79 கோடி நலத்திட்ட உதவி
தோட்டக்கலை சார்பில் ரூ. 6.79 கோடி நலத்திட்ட உதவி
தோட்டக்கலை சார்பில் ரூ. 6.79 கோடி நலத்திட்ட உதவி
தோட்டக்கலை சார்பில் ரூ. 6.79 கோடி நலத்திட்ட உதவி
ADDED : மார் 19, 2025 08:05 PM
ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில், பல்வேறு திட்டங்களின் கீழ், 2023-24 மற்றும் 2024--25ம் நிதியாண்டில், 5,053 பயனாளிகளுக்கு, 6.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில், பல்வேறு திட்டங்களின் கீழ் வழக்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்த விபரம்:
நீலகிரி தேயிலை விவசாயிகள் பயனடையும் வகையில், 2023-24 நிதியாண்டில், இயந்திரம் ஆக்குதல் திட்டத்தின் கீழ், 1,000 பயனாளிகளுக்கு, 50 சதவீத மானியத்தில், 80 லட்சம் ரூபாய், 2024--25ம் நிதியாண்டில், 500 பயனாளிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், அங்கக வேளாண்மை திட்டத்தின் கீழ், 2023-24 நிதியாண்டில், 1,311 பயனாளிகளுக்கு, 2.16 கோடி ரூபாய், 2024--25ம் நிதியாண்டில், 2,100 பயனாளிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில் 2.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பயிற்சி, மண்வாசம் மேம்பாடு, டாலமைன், தோட்ட செயல்விளக்க மானியம், அங்கக இயற்கை உரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ், 2023--24 மற்றும் 2024--25ம் நிதியாண்டில், மொத்தம், 132 பயனாளிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில், 94.38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நடவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், '2023--24 நிதியாண்டில், 2,379 பயனாளிகளுக்கு, 3.58 கோடி ரூபாய், 20௨4--25ம் நிதியாண்டில், 2,674 பயனாளிகளுக்கு, 3.21 கோடி ரூபாய்,' என, மொத்தம், 6.79 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.