/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வீடியோவால் விபரீதம்; சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் வீடியோவால் விபரீதம்; சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்
வீடியோவால் விபரீதம்; சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்
வீடியோவால் விபரீதம்; சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்
வீடியோவால் விபரீதம்; சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்
ADDED : அக் 05, 2025 11:03 PM
ஊட்டி: 'இன்ஸ்டாகிராம் வீடியோ' பார்த்து கிண்ணக்கொரை வனப்பகுதியில் காப்பு காட்டிற்குள் அத்துமீறி நுழைந்த, கேரளா மாநில சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரி வனக்கோட்டம், குந்தா வனச்சரகம், தாய்சோலை பிரிவுக்கு உட்பட்ட கிண்ணக்கொரை பகுதியை சுற்றியுள்ள வனப்பகுகள் குறித்த 'வீடியோ' சமீபகாலமாக சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது. இதனை பார்க்கும், சில சுற்றுலா பயணிகள், நீலகிரிக்கு சுற்றுலா வரும் போது, அத்துமீறி வனப்பகுதியில் நுழைவதும், வன உயிரினங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க, வனத்துறை சார்பில் 'வனப்பகுதியில் அத்துமீறி நுழையக்கூடாது' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. சில சுற்றுலா பயணிகள் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைகின்றனர்.
இந்நிலையில், கிண்ணக்கொரை வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த, கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த அபிஜித், ஹிரிகிருஷ்ணன், சித்தார்த் ஆகிய மூவருக்கும், 2,000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் வனத்துறையால் விதிக்கப்பட்டது.


