/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சாலையில் நிறுத்திய வாகனங்கள் போக்குவரத்துக்கு பாதிப்பு சாலையில் நிறுத்திய வாகனங்கள் போக்குவரத்துக்கு பாதிப்பு
சாலையில் நிறுத்திய வாகனங்கள் போக்குவரத்துக்கு பாதிப்பு
சாலையில் நிறுத்திய வாகனங்கள் போக்குவரத்துக்கு பாதிப்பு
சாலையில் நிறுத்திய வாகனங்கள் போக்குவரத்துக்கு பாதிப்பு
ADDED : ஜூன் 03, 2025 11:32 PM

குன்னுார், ; குன்னுார் மவுன்ட் ரோட்டில், கருணாநிதி பிறந்த நாள் விழாவிற்காக, கட்சியினர் வாகனங்கள் சாலையில் நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குன்னுார் மவுன்ட் ரோடு, அண்ணா சிலை அருகே நேற்று தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது. விழாவில் பங்கேற்க வந்த, அரசு கொறடா ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் முபாரக் உட்பட கட்சியினரின் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பொது மக்கள் கூறுகையில், 'அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு இடங்களுக்கும் செல்லும் இந்த ரோட்டில், இது போன்று வாகனங்கள் நிறுத்த போலீசார் தடை விதிக்க வேண்டும்,' என்றனர்.