/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சீரமைக்காத நடைபாதை; மக்கள் நடமாட சிரமம் சீரமைக்காத நடைபாதை; மக்கள் நடமாட சிரமம்
சீரமைக்காத நடைபாதை; மக்கள் நடமாட சிரமம்
சீரமைக்காத நடைபாதை; மக்கள் நடமாட சிரமம்
சீரமைக்காத நடைபாதை; மக்கள் நடமாட சிரமம்
ADDED : ஜூன் 10, 2025 09:23 PM

குன்னுார்; குன்னுார் உமரி காட்டேஜ் -பரசுராம் தெரு குறுக்கு நடைபாதை படிக்கெட் சீரமைக்காமல் உள்ளதால் மக்கள் நடமாட மிகவும் சிரமப்படுகின்றனர்.
குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 12 வது வார்டு பரசுரம் தெரு பகுதியில் இருந்து உமரி காட்டேஜ் செல்லும், அல்லா பிச்சை லைன் நடைபாதை படிக்கெட், கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. தற்போது, இந்த பகுதி முழுவதும் சேதமடைந்து மக்கள் நடமாட முடியாத நிலை ஏட்பட்டுள்ளது.
குறிப்பாக, பள்ளி மாணவ மாணவியர் மற்றும் முதியவர்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.
தாழ்வான பகுதியிலிருந்து உயரமான இடத்திற்கு செல்லும் இங்கு படிகள் இடிந்துள்ளதால், மழை நீருடன் வெளியேறும் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
இது தொடர்பாக, நகராட்சிக்கு பலமுறை புகார்கள் கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை.
இதே போல, குமரன் நகர் பகுதியில் நடைபாதை சீரமைக்காமல் உள்ளதால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
தீர்வு காண கோரி பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.