ADDED : பிப் 12, 2024 12:26 AM
கோவில்பாளையம்;தி.மு.க., பிரமுகர் வீட்டுக்கு அமைச்சர் உதயநிதி சென்று அஞ்சலி செலுத்தினார்.
காளப்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவரும், தி.மு.க., கோவை மாநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளருமான, பையா கவுண்டர் கடந்த 25ம் தேதி காலமானார்.
அரசு நிகழ்ச்சியில், பங்கேற்க, நேற்று கோவை வந்த, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, காளப்பட்டியில் உள்ள பையா கவுண்டர் இல்லத்துக்கு சென்றார். அங்கு பையா கவுண்டர் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, நீலகிரி எம்.பி., ராஜா மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.