Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சிறையில் அடைக்கப்பட்ட இரு பெண்கள்

சிறையில் அடைக்கப்பட்ட இரு பெண்கள்

சிறையில் அடைக்கப்பட்ட இரு பெண்கள்

சிறையில் அடைக்கப்பட்ட இரு பெண்கள்

ADDED : மே 19, 2025 08:45 PM


Google News
Latest Tamil News
பந்தலுார்; பந்தலுார் நெலாக்கோட்டை வீரப்பன் காலனி பகுதியை சேர்ந்த முகமதுஎன்பவரின் மனைவி மைமூனா, 55, என்பவரைகடந்த, 16ம் தேதி, அவரின்மருமகள் கைருனிஷா,38, அவரின் சகோதரி அசீனா, 29, ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்தனர்.

போலீஸ் விசாரணையில்,'கைருன்ஷா மைமூனா மீது, முதல் கட்ட தாக்குதலுடன் நிறுத்தி விட, அசீனாதொடர்ச்சியாக, 26 முறை முகத்தில், குக்கர் மூடி, தேங்காய் துருவி, கட்டை ஆகியவற்றால் தாக்கி உள்ளார். போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி, கோவை சிறையில் உள்ள அசீனாவின் கணவர் நஜூமுதீனை ஜாமின் எடுப்பதற்கு பணம் இல்லாததால், நகையை கொள்ளை அடிப்பதற்காக இந்த கொலையை செய்துள்ளார்,' என்பதும் தெரியவந்துள்ளது.

கொலையாளிகள் இருவரையும் நேற்று காலை, பந்தலுார் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் போலீசார்ஆஜர்படுத்தினர். நீதிபதி, ஜூன், 2-ம் தேதி வரை, அவர்களை காவலில் வைக்கஉத்தரவிட்டார். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us